Subscribe:

Ads 468x60px

Pages

Wednesday, June 29, 2011

அனுஷ்காவா..? தமன்னாவா..?

Buzz It

( இன்னிக்கு நம்மளவிட்டா.. கலாய்க்க
வேற ஆள் சிக்கலையோ..?!! )

இன்னிக்கு நம்ம
டெரர் கும்மி நண்பர் அருண்.,
தன்னோட 32வது Birthday-ஐ
15வது தடவையா கொண்டாடுறாரு..!

அவர் Birthday-க்காக.. ஸ்பெஷலா..
அருணை வாரி., வாரி புகழ்ந்து
ஒரு கவிதை..

அழகாய் சிரிப்பவனும் நீதான்..,
அசடு வழிய நிற்பவனும் நீதான்..,

அமைதியான ஆழ்கடலும் நீதான்..,
ஆர்பரித்தால் சுனாமியும் நீதான்..,

கை தூக்கி விடுபவனும் நீதான்..,
காலை வாரி விடுபவனும் நீதான்..,

டயட்டில் இருப்பவனும் நீதான்..,
டயர்ட் ஆகாமல் உண்பவனும் நீதான்..,

தத்துவங்கள் தெளிப்பவனும் நீதான்..,
தத்துபித்தென்று உளறுபவனும் நீதான்..,

தோள் கொடுப்பதில் கர்ணன் நீதான்.,
போட்டு கொடுப்பதில் புரூட்டஸ் நீதான்..

அவ்ளோ தான்..


( வாவ்..! கவித., கவித..! )

சாரி அருண்.. என்னால Continuous-ஆ
ரெண்டு வரி பொய் பேச முடியாது..!

டிஸ்கி : நேத்து நைட்.. அருண் எனக்கு
போன் பண்ணி.."  நாளைக்கு எனக்கு
Birthday.. என்னை வாழ்த்தி ஒரு பதிவு
போடுங்கன்னு " கெஞ்சி., கதறி அழுதாரு..

இவரு சிரிச்சாவே.. அந்த கொடுமையை
நாடு தாங்காது.. இதுல அழுதா..?!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்..!

ரமேஷ் போட்டோவை Close-Up-ல
பாத்து பயந்து போன குழந்தை மாதிரி
நானும் அப்ப பயந்துட்டேன்..

அதான் வேற வழியில்லாம..
என் பிரண்டுக்கு எழுதி வெச்சிருந்த
Birthday கவிதையை உல்டா பண்ணி
இவருக்கு போட வேண்டியதா போச்சு..!!

பின்ன, இவரை மனசுல நினைச்ச உடனே
அப்படியே கவிதை அருவி மாதிரி
கொட்டறதுக்கு இவரென்ன அனுஷ்காவா.?
தமன்னாவா..?

( அப்பாடி.. தலைப்புக்கு சம்பந்தமா
ஒரு லைன் எழுதியச்சு..! )

பதிவை உல்டா பண்ணி கமெண்ட்
போடறவர் தானே இவரு..!

இவருக்கு இந்த உல்டா கவிதையே
Too Much..!

மேலும் இவரை வேறு வழியில்லாமல்
வாழ்த்துவோர்..

மனைவி : Mrs.காயத்ரி அருண்.,
பேத்தி : ஷம்ஹிதா
மற்றும்..
உயிர் ( வாங்கும் ) டெரர் கும்மி நண்பர்கள்..

Last But Not Least.....

டெரர் கும்மியின் செல்லப்பிள்ளை
செல்வாவுக்கும் இன்னிக்கு தான்
பிறந்த நாள்..!!

" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
செல்வா..! "

இப்படிக்கு
டெரர் கும்மி நண்பர்கள்,
மற்றும்
அனுஷ்கா & தமன்னா..


டெரர் கும்மிக்காக...
வெங்கட்

32 comments:

எஸ்.கே said...

என்றும் மகிழ்ச்சியோடு எல்லா வளங்களும் பெற்று வாழ அருண் மற்றும் செல்வா இருவருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வைகை said...

ரமேஷ் போட்டோவை Close-Up-ல
பாத்து பயந்து போன குழந்தை மாதிரி
நானும் அப்ப பயந்துட்டேன்.. //

நான்தான் பயந்தேன்னு எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா?

வைகை said...

தன்னோட 32வது Birthday-ஐ
15வது தடவையா கொண்டாடுறாரு..!//

அப்ப வயசு 47? சரிதானே?

வைகை said...

அழகாய் சிரிப்பவனும் நீதான்..,
அசடு வழிய நிற்பவனும் நீதான்..,//

அழகாய் சிரிப்பவனும் நீதான்..,
அழுக்காய் இருப்பவனும் நீதான்..,

வைகை said...

அமைதியான ஆழ்கடலும் நீதான்..,
ஆர்பரித்தால் சுனாமியும் நீதான்..,/

அமைதியான ஆழ்கடலும் நீதான்..,
தேங்கி நிற்கும் சாக்கடையும் நீதான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்றும் மகிழ்ச்சியோடு எல்லா வளங்களும் பெற்று வாழ அருண் மற்றும் செல்வா இருவருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// என்றும் மகிழ்ச்சியோடு எல்லா வளங்களும்
பெற்று வாழ அருண் மற்றும் செல்வா
இருவருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் //

வர வர உங்க எழுத்து நடை
நம்ம சி.பி.செந்தில்குமார் மாதிரியே
இருக்கு.. ( Copy , Paste)

karthikkumar said...

என்றும் மகிழ்ச்சியோடு எல்லா வளங்களும் பெற்று வாழ அருண் மற்றும் செல்வா இருவருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

(thanks to sk.)

Lakshmi said...

இனிமேல அவர் உங்ககிட்ட பர்த்டேன்னு
சொல்லவேமாட்டார்.

Madhavan Srinivasagopalan said...

//வைகை said...

தன்னோட 32வது Birthday-ஐ
15வது தடவையா கொண்டாடுறாரு..!//

அப்ப வயசு 47? சரிதானே? //

அவசியம் இல்லை..
வேற ஒரு பர்த்டேவ ஒரு தடவைக்கு மேல கொண்டாடி இருந்தா..?

இம்சைஅரசன் பாபு.. said...

தம்பி செல்வா மற்றும் அருண் மக்கா இருவரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மக்கா

மாணவன் said...

செல்வா மற்றும் அருண் மக்கா இருவரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மக்கா
:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனுஷ்கா படம் போட்ட வெங்கட்டிற்கு வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லனுமா. நான் போய் காப்பி பண்ணிட்டு வர்ரேன்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருண், செல்வா இருவருக்கும் இனியபிறந்த நன்னாள் வாழ்த்துகளையும், இதுபோல இன்னும் இன்னும் பலப்பல பிறந்தநாட்களை மென்மேலும் சந்தோசமாக கொண்டாடி லட்சியங்களை சாதித்து மகிழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டெரர் கும்மி நண்பர் அருண்.,
தன்னோட 32வது Birthday-ஐ
15வது தடவையா கொண்டாடுறாரு..!////////

சினிமாவுல எடுபுடியா இருக்காரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அவர் Birthday-க்காக.. ஸ்பெஷலா..
அருணை வாரி., வாரி புகழ்ந்து
ஒரு கவிதை..//////

சும்மா ரெண்டு ரெண்டு வரியா எழுதுனா அது கவிதையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெங்கட் இந்தக் கவிதையும் எஸ்.எம்.எஸ்லதான் வந்துச்சா?

கோமாளி செல்வா said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் கோடி :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ் போட்டோவை Close-Up-ல
பாத்து பயந்து போன குழந்தை மாதிரி
நானும் அப்ப பயந்துட்டேன்.. ///////

ஏன் வெங்கட், ரமேஷ் போட்டோவை Close-Up-ல பாத்தா குழந்தைங்க மட்டும்தான் பயப்படுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பின்ன, இவரை மனசுல நினைச்ச உடனே
அப்படியே கவிதை அருவி மாதிரி
கொட்டறதுக்கு இவரென்ன அனுஷ்காவா.?
தமன்னாவா..? /////////

எப்படியோ அனுஷ்கா, தமன்னா படம் போட்டாச்சில்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
தன்னோட 32வது Birthday-ஐ
15வது தடவையா கொண்டாடுறாரு..!//

அப்ப வயசு 47? சரிதானே?///////

47 தானா?

சேலம் தேவா said...

//அவர் Birthday-க்காக.. ஸ்பெஷலா..
அருணை வாரி., வாரி புகழ்ந்து
ஒரு கவிதை..//

நல்லா 'வாரி., வாரி' புகழ்ந்துருக்கீங்க தல...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏன் வெங்கட், ரமேஷ் போட்டோவை Close-Up-ல பாத்தா குழந்தைங்க மட்டும்தான் பயப்படுமா?//

அப்டின்னா Colcate பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

Shalini(Me The First) said...

Happy Birth Day "Mr.Sun`snetway"

Happy Birth Day Selva :)

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க பாஸ்
அப்புறம் கவிதை சூப்பர் பாஸ்

கடம்பவன குயில் said...

எப்படி இப்படியெல்லாம் இலக்கியநயத்தோட கவிதை எழுதறீங்களோ. கொன்னுட்டீங்க போங்க. உங்க கவிதையைக்கேட்டு மயங்கி விழுந்த பர்த்டே செலிபிரட்டீஸ் இரண்டுபேரும் இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்காங்களாம். இன்னொரு கவிதை பாடி மயக்கத்தை தெளிய வையுங்கள் ப்ளீஸ்.

Sen22 said...

Happy B'day Arun & Selva...!!

அருண் பிரசாத் said...

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்.... கழுதை...சே கவிதை எழுதிய வெங்கட்டுக்கும் நன்றி....

என்ன ஒரு 15 வயசு ஏத்தி சொல்லிட்டீங்க

தமிழ்வாசி - Prakash said...

வாழ்த்துக்கள் நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

தோள் கொடுப்பதில் கர்ணன் நீதான்.,
போட்டு கொடுப்பதில் புரூட்டஸ் நீதான்..//

வாழ்த்துக்கள்